
Williamson ruled out of New Zealand team for B'desh Tests, Latham to lead (Image Source: Google)
வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 1ஆம் தேதி மவுண்ட் மங்குனியில் தொடங்குகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான 13 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
அதன் காரணமாக இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த டேவன் கான்வே மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.