
Willing To Sacrifice World T20 For Ashes: Steve Smith (Image Source: Google)
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், "டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் நிறைய நாள் இருக்கிறது. காயத்திலிருந்து மெதுவாக மீண்டு வருகிறேன். டி20 உலகக் கோப்பையில் பங்குபெற விருப்பமாக உள்ளேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் என் லட்சியம். ஆஷஸ் போட்டிக்குத் தயாராக வேண்டும்.
கடந்த ஆஷஸ் போட்டியில் விளையாடியதை விடவும் சிறப்பாக விளையாட வேண்டும். அந்தளவுக்குத் தாக்கத்தை நான் ஏற்படுத்த வேண்டும். அதற்காக டி20 உலகக் கோப்பையில் பங்குபெற வேண்டாம் என்றாலும் அதை நான் ஏற்பேன். எனினும் அந்தளவுக்குப் போகவேண்டியதில்லை என நினைக்கிறேன்” என்று தேரிவித்தார்.