
ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடிவருகின்றன.
இதில் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனி பதவி விலகினார். புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி களமிறங்கியது. இது ஒருபுறம் இருக்க சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை புறக்கணித்துவிட்டு, சென்னை அணி இந்த முறை விளையாடுகிறது.
ஐபிஎல் தொடரில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னா மீது ஆர்வம் காட்டவில்லை. இதனால் அவர் வர்ணனையாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்தி மொழி வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா பணியாற்றுகிறார். இதற்காக இன்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நடனம் ஆடிக்கொண்டும், விசில் அடித்துக்கொண்டும் அலுவலகத்திற்குள் சென்ற காணொளி இணையத்தை கலக்கி வருகிறார்.