
Wishes Pour In As India's Cricket Icon Sachin Tendulkar Turns 48 (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 48 வது பிறந்த தினத்தை தினம் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிசிசிஐ, இந்திய அணி வீரர்கள், தடகள வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவருக்கு யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரஹானே, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள இரட்டை சதத்தின் ஹைலைட்சை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலியாக பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஐசிசி, இந்திய அணி உள்ளிட்டவை தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.