
WIW vs PAKW, 2nd ODI: Mathews, Anisa double West Indies' lead in ODI series (Image Source: Google)
பாகிஸ்தான் மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரங்கனை முனீபா அலியைத் தவிர மற்றவர்கள் வந்த சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர். இதனால் 42.4 ஓவர்களில் பாகிஸ்தான் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக முனீபா அலி 37 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அனிஸா முகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.