
WIW vs SAW: Laura Wolvaardt, Marizanne Kapp set up easy 9-wicket win (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 44.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லாரா வால்வொர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றார்.