Advertisement

மகளிர் ஆஷஸ்: 205 ரன்னில் சுருண்ட ஆஸி; இங்கிலாந்து அபாரம்!

மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
Women's Ashes: Australia finish with 205
Women's Ashes: Australia finish with 205 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 03, 2022 • 12:38 PM

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனெவே டி20, டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம் ஆனது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 03, 2022 • 12:38 PM

அதன்படி கான்பெர்ராவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Trending

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ரேச்சல் ஹெய்னஸ் 4 ரன்னிலும், அலிசா ஹீலி 27, மெக் லெனிங் 28, எல்லிஸ் பெர்ரி 0 என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அடுத்து களமிறங்கிய பெத் மூனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனார். அதன்பின் 73 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கியவர்களும் சோபிக்க தவறினர். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் பிரண்ட், கேட் கிராஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement