
Women's Ashes: Perry, McGrath star as Australia defeat England in 2nd ODI (Image Source: Google)
மகளிர் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 45.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது.