மகளிர் ஆஷஸ் 2022: மழையால் இரண்டாவது டி20 போட்டி ரத்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் டேனியல் வையட் -டாமி பியூமண்ட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இப்போட்டியின் 4.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி அடிலெய்டில் நாளை நடைபெறவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now