Advertisement

மகளிர் ஆஷஸ் 2022: தஹிலா மெக்ராத் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 20, 2022 • 21:41 PM
Women's Ashes: Tahlia McGrath Shines As Australia Thrash England By 9 Wickets In The First T20I
Women's Ashes: Tahlia McGrath Shines As Australia Thrash England By 9 Wickets In The First T20I (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் தொடர் இன்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை டேனியல் வையட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக டாமி பியூமண்ட், நாட் ஸ்கைவர் ஆகியோரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். 

Trending


இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக டேனியல் வையட் 70 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் தஹிலா மெக்ராத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் சவாலான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த மெக் லெனின் - தஹிலா மெக்ராத் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஹிலா மெக்ராத் 91 ரன்களையும், மெக் லெனின் 64 ரன்களையும் சேர்த்தனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement