மகளிர் கிரிக்கெட்டிற்கு ஊடகத்தின் பங்கு தேவை; ஒருபோதும் செய்தியாளர் சந்திப்பை கைவிட்டதில்லை - மிதாலி ராஜ்
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க ஊடகங்களின் வெளிச்சம் தேவை என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நாளை தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா ஆட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தது பற்றி மிதாலி ராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.
Trending
அதற்கு பதிலளித்த மிதாலி ராஜ், "எந்த ஒரு வீரர்/வீராங்கனைக்கும் தனிமையில் இருப்பது கடினம். ஆனால், ஒரு தொடரில் பங்கேற்பதற்கு முன்பு நாங்கள் அப்படி உணர மாட்டோம். தனிப்பட்ட முறையில் செய்தியாளர் சந்திப்பை கைவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியதில்லை. காரணம், தற்போதைய நிலையில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊடக வெளிச்சம் தேவை.
இந்த விளையாட்டு வளர்ச்சி அடைய முயற்சிப்பது வீரர்கள்/வீராங்கனைகளுக்கும் முக்கியம். விளையாட்டை ஊக்குவிக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now