Advertisement

மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
Women's CWC 2022: South Africa beat Bangladesh by 32 runs
Women's CWC 2022: South Africa beat Bangladesh by 32 runs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 05, 2022 • 12:17 PM

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 05, 2022 • 12:17 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களைச் சேர்த்தது.

Trending

அந்த அணியில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 41 ரன்களையும், மரிசான் கேப் 42 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷாமிமா சுல்தானா - ஷார்மின் அக்தர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

பின் சுல்தானா 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அக்தர் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 49.3 ஓவர்களில் வங்கதேச மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்க காக்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement