
Women's CWC: England's all round performance sinks Pakistan (Image Source: Google)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சித்ரா அமீன், சித்ரா நவாஸ் ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 41.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 32 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கேத்ரின் பர்ண்ட், சோஃபி எக்லஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.