ENG vs WI, 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இரு அணி வீரர்க்ளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
Trending
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சார்ளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட மார்க் வுட், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வூட், சோயிப் பஷீர்
Win Big, Make Your Cricket Tales Now