
World Test Championship: Players With Most Runs & Most Wickets (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி அறிமுகப்படுத்தியது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதிப் பெற்றனர்.
இதையடுத்து இந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கிய இறுதிப் போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அவர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இச்சாதனையை படைத்துள்ளார்.