நான் நியூசிலாந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நிச்சயம் இதனை செய்திருப்பேன் - கவுதம் கம்பீர்!
நியூசிலாந்து அணி தன்னுடைய முழுமையான திறனை மைதானத்தில் வெளிக்காட்டவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆன கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அபாரமான விளையாட்டை நியூசிலாந்து அணியினர் வெளிப்படுத்தி வந்தனர். இறுதிப்போட்டியில் கூட நியூசிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால், இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தன்னுடைய முதல் டி20 வெற்றிக்கோப்பையை பெற தவறியது நியூசிலாந்து.
இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் வெற்றி- தோல்விகளை விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.
Trending
கம்பீர் கூறுகையில், “எனக்கு இந்திய அணிக்குப் பின்னர் மிகவும் பிடித்த அணி என்றால் அது நியூசிலாந்து தான். நான் பார்த்த வரையில் அவர்களை மிகவும் குறைவாக நடத்துவது நல்லதாகப் படவில்லை. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளுக்கு 172 ரன்கள் என்பது மிகச்சிறந்த ஸ்கோர்தான். ஆனால், அன்றைய தினத்தில் அவர்கள் எந்த அணிக்கு எதிராகப் போட்டியிடுகிறார்கள் என்பது வெற்றி வாய்ப்பை மாற்றிவிட்டது. நியூசிலாந்தின் ஆட்டம் அன்றைய தினத்தில் சிறப்பாக அமையவில்லை.
சிறந்த திட்டமிடல், யாருக்கு எந்த பொறுப்பை வழங்குவது, திட்டமிட்டதை சரியாகச் செய்தல், என நியூசிலாந்து அணிக்கு மிகச் சிறந்த குணங்கள் உள்ளன. ஆனால், இறுதிப்போட்டி அவ்வளவு தரமானதாக இருக்கவில்லை. நான் மட்டும் அன்றைய தினத்தில் நியூசிலாந்து ஆதரவாளர் ஆக போட்டியை பார்த்திருந்தால் நிச்சயமாக கொடுத்த பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டிருப்பேன்.
Also Read: T20 World Cup 2021
அதேபோல் ஆஸ்திரேலியாவின் மிட்செலுக்கு நியூசிலாந்து பந்துவீச்சு சரியானது இல்லை. கேப்டன் கேன் வில்லயம்சனின் அதிரடி ஆட்டம் மட்டுமே அந்த அணி 172 ரன்களைக் குவிக்க உதவியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now