
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 9ஆவது தோல்வியை சந்தித்து, பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிவிட்டது. சீசன் துவங்கியபோது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்ததை அடுத்து, ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேயின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், சென்னை அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்ததால் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா.
கேப்டன் பதவியை தோனி மீண்டும் ஏற்றபோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்களுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது. சீசனின் நடுவே சென்னை அணியின் கேப்டனாக தோனி திரும்பியது ரசிகர்களிடையே புது நம்பிக்கையைக் கொண்டுவந்தது.
ஆனால் தொடர் தோல்விகளால் நான்கு முறை ஐபிஎல் கோப்பை தனதாக்கிய சென்னை அணி 2வது முறையாக பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லத் தவறிவிட்டது. தொடக்கத்தில் இருந்தே தோனி கேப்டனாக இருந்திருந்தால், ஐபிஎல் 2022ல் சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கு சென்றிருக்குமா என்று ரசிகர்கள் விவாதிக்க துவங்கினர்.