கோப்பையுடன் தாயகம் சென்றடைந்த நியூசிலாந்து அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்ற நியூசிலாந்து அணி கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றது. மேலும் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடரை வென்ற நியூசிலாந்து அணி இன்று தனி விமானம் மூலம் கோப்பையுடன் தாயகம் திரும்பியுள்ளது. கரோனா பரவல் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எந்தவொரு வரவேற்பும் இன்றி அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இத்தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் அணி தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now