Advertisement

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய இலங்கை அணி இன்னும் முதலிடத்தில் நீடிக்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan March 01, 2022 • 16:56 PM
WTC Defending Champions Suffer Major Setback After Test Defeat Against South Africa
WTC Defending Champions Suffer Major Setback After Test Defeat Against South Africa (Image Source: Google)
Advertisement

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்  முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. நியூசிலாந்தும் இந்தியாவும் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.

அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் நடந்துவருகின்றன. வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை அணி, முதலிடத்தை இழக்கும் வாய்ப்புள்ளது.

Trending


86.66 சதவிகித வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாமிடத்திலும், 75 சதவிகித வெற்றியுடன் பாகிஸ்தான் அணி மூன்றாமிடத்திலும் உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஒன்றில் மட்டுமே தோற்று, மற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2ஆவது போட்டியில் வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி 50 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.

கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் மோதிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 5 மற்றும் 6ஆம் இடத்தில் உள்ளன. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, வெறும் 9.25 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement