Advertisement

ட்விட்டரில் வைரலாகும் அஸ்வின், ஜடேஜா ஹேஸ்டேக்!

நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது ஹேஸ்டேக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
WTC final : Ashwin, Jadeja hashtag goes viral on Twitter
WTC final : Ashwin, Jadeja hashtag goes viral on Twitter (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 17, 2021 • 03:39 PM

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் நாளை (ஜூன்.18) எதிர்கொள்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 17, 2021 • 03:39 PM

இப்போட்டிக்கான கடந்த சில தினங்களாகவே இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். மேலும் இப்போட்டியில் பங்கேற்கு 15 பேர் கொண்ட அணிகளையும் இரு அணியும் அறிவித்து பரபரப்பை அதிகரித்துள்ளன. 

Trending

இதனால் நாளைய போட்டியில் களமிறங்கும் பிளேயிங் லெவன் பலரும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமாக இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா காம்போ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. 

ஏனெனில் இவர்கள் இருவரும் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் கடந்தவிட்டன. மேலும் இவர்களது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திறன் நிச்சயம் எதிரணிக்கு தலைவலியாக அமையும் என்பதால், நாளைய போட்டிக்கான அனைவரது பிளேயிங் லெவன் அணியில் இவர்கள் பெயர் இடம்பிடுத்துள்ளன.

ஆனால் சவுத்தாம்ப்டன் மைதானம் வேகப்பந்துவீச்சு சாதகமாக இருப்பதால், ஸ்விங் அதிகம் ஆகும். வானிலையும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இருப்பதால், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடும் என்று கூறப்படுகிறது. 

அப்படி ஆடும் பட்சத்தில், பேட்டிங்கில் அஷ்வினை விட சிறந்தவராக இருக்கும் ஜடேஜாவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு இந்திய அணி பலமுறை வெற்றி வாகையை சூடியுள்ளது. அதனால் இவர்களது காம்போ மீண்டும் அணியில் இருக்க வேண்டும் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். 

ஆனால் அணியின் பிளேயிங் லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது நாளை டாஸ் போட்ட பிறகு தான் தெரியவரும். அதுவரை ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement