Advertisement

WTC Final: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 18, 2021 • 22:53 PM
WTC Final: Can India Still Change The Playing XI?
WTC Final: Can India Still Change The Playing XI? (Image Source: Google)
Advertisement

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று சவுத்தம்டன் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் தொடங்குவதாக இருந்தது. நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றைய முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை வரை சவுத்தம்ப்டனில் வானிலை நன்றாக இருந்தது. இதனால் இந்தியா அணி நேற்றைய தினமே அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது. இந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருந்தனர்.

Trending


முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், போட்டி நடைபெறும் ஐந்து நாட்களும் மழை பெய்யும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சவுத்தம்ப்டனில் வறண்ட வானிலை நிலவினால் 4ஆவது மற்றும் 5அவது நாள் ஆட்டத்தின்போது சுழற்பந்து வீச்சு அதிக அளவில் எடுபடும். அதேவேளையில் ஸ்விங் மிகப்பெரிய அளவிற்கு இருக்காது. தற்போது ஐந்து நாட்கள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆடுகளம் ஸ்விங்கிற்கு அதிகமாக ஒத்துழைக்கும். இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். 

இந்த மூன்று பேரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஆனால், இவர்களால் பந்தை மிகச்சிறப்பான வகையில், குறிப்பாக புதுப்பந்தில் ஸ்விங் செய்ய இயலாது. அதே நேரத்தில் இளம் வீரரான முகமது சிராஜ் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்யக் கூடியவர்.

இந்தியா ஆடும் லெவன் அணியை அறிவிப்பதற்கு முன் முகமது சிராஜ்-யை அணியில் சேர்க்க வேண்டும் என டுவிட்டரில் விவாதமே நடந்தது.இந்தியா ஏற்கனவே ஆடும் லெவனை அறிவித்த நிலையில், சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு, ஆடும் லெவனை மாற்றலாம். ஐந்து நாட்களும் மழை பெய்தால் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை வெளியில் வைத்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முயற்சி செய்யலாம். அல்லது இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, பும்ரா ஆகியோரில் ஒருவரை வெளியில் வைத்து முகமது சிராஜ்-யை ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement