
WTC Final: Dinesh Karthik Impresses Fans On His Commentary Debut (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முற்றிலுமாக மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் எந்தவித சிக்கலும் இன்றி நடைபெற்றது,
இந்த நிலையில் இப்போட்டியில் வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு பேட்ஸ்மேனாக அவர் வைரல் ஆனதை விட, மிக குறுகிய காலத்தில் ஒரு வர்ணனையாளராக தனது பேச்சாற்றலால் அடிக்கடி வைரலாகி வருகிறார்.
அந்த வகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வர்ணனை செய்து வரும் தினேஷ், போட்டி தொடக்கிய முதல் நாளிலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார்.