
WTC final: Ishant Sharma suffers injury to bowling hand, gets three stitches (Image Source: Google)
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாள்ளர் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் விக்கெட் ஏதும் கைப்பற்ற முடியவில்லை.
இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தின்போது ராஸ் டெய்லருக்கு வீசிய பந்தை தானே தடுக்க முயன்றபோது இஷாந்துக்கு கைவிரல்களில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாந்தின் விரல்களில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவரின் நடு விரலிலும், மோதிர விரலிலும் 3 தையல்கள் போடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.