
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து இந்திய அணி, 149 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையிலிருந்து, 217 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்தார். கோலியும் ரஹானேவும் ஆடியவரை இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் கோலி 44 ரன்னிலும், ரஹானே 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்து, 217 ரன்களுக்கு சுருண்டது.
கோலி ஆட்டமிழந்தபிறகும், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேவை அருமையாக பிளான் செய்து வீழ்த்தினார் கேன் வில்லியம்சன். ரஹானே 49 ரன்களை எட்டிய நிலையில், பவுலர் நீல் வாக்னரிடம் சென்று பேசிவிட்டு, ஒரு ஃபீல்டரை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்தினார் கேன் வில்லியம்சன். அதற்கடுத்த பந்தை நீல் வாக்னர் ஷார்ட் பிட்ச் பந்தாக வீச, அதை சரியாக அந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து ரஹானே ஆட்டமிழந்தார்.