Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிர் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாஃபர்!

நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள 11 வீரர்களை புதிர் மூலம் வாசிம் ஜாஃபர் வெளியிட்டுள்ளார் .

Bharathi Kannan
By Bharathi Kannan June 16, 2021 • 20:04 PM
wtc-final-wasim-jaffer-picks-indias-xi-for-final
wtc-final-wasim-jaffer-picks-indias-xi-for-final (Image Source: Google)
Advertisement

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளைமறுநாள் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும்15 பேர் கொண்ட அணிகளை இரு நாடுகளும் அறிவித்துவிட்டன. ஆனால் விளையாடும் லெவன் அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் யார்? யார்? என்பது போட்டி அன்றே தெரியவரும்.

Trending


அதற்கு முன் இந்திய அணியில் இவர்களெல்லாம் இடம் பெறலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். இதன் ஒருபகுதியாக இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் பேட்ஸ்மேனும், ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் அடித்தவருமான வாசிம் ஜாஃபர் இப்போட்டியில் பங்கேற்கு அணி குறித்து புதிர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்திய வீரரர்கள் பெரும்பாலானோர் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்கள். அவர்கள் விளையாடும் ஐபிஎல் அணியை வைத்து 11 பேர் கொண்ட இந்திய அணியை வாசிம் ஜாஃபர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் தனது டுவிட்டர் பக்கத்தில், “1. மும்பை இந்தியன்ஸ், 2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 3. சென்னை சூப்பர் கிங்ஸ், 4. ஆர்சிபி, 5. டெல்லி கேப்பிட்டல்ஸ், 6 டெல்லி கேப்பிட்டல்ஸ், 7. சென்னை சூப்பர் கிங்ஸ், 8. டெல்லி கேப்பிட்டல்ஸ், 9. டெல்லி கேப்பிட்டல்ஸ், 10. பஞ்சாப் கிங்ஸ், 11. மும்பை இந்தியன்ஸ்” எனத் தெரிவித்துள்ளார். 

 

15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளவர்கள் ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பதை ரசிகர்கள் சரியாக கண்டுபிடித்தால் 11 பேர் கொண்ட பட்டியல் வரும்.

வாசிம் ஜாஃபர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் 1. ரோகித் சர்மா, 2. சுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரஹானே, 6. ரிஷப் பந்த், 7. ரவீந்திர ஜடேஜா, 8. ரவிச்சந்திரன் அஷ்வின், 9. இஷாந்த் சர்மா, 10, முகமது ஷமி, 11. ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தான் அவர் குறிப்பிடுகிறார் என தெரியவந்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement