
Yash Dhull Named Captain Of The Official ICC Most Valuable Team Of The Tournament (Image Source: Google)
ஐசிசியின் 14ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்து 5ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் ஐசிசி தனது அண்டர் 19 உலகக்கோப்பை அணியை தேர்வு செய்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக செயல்பட்ட யாஷ் துல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்த விக்கி ஓட்ஸ்வால், ராஜ் பாவா ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.