
Yash Dhull Set to Lead India U-19 Team In Cricket World Cup 2022 (Image Source: Google)
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோ்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் 48 போட்டிகளில் விளையாடவுள்ளன. 4 பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெறும்.
இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஜனவரி 15ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பிறகு, ஜனவரி 19ஆம் தேதி அயர்லாந்தையும், ஜனவரி 22ஆம் தேதி உகாண்டாவையும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக யாஷ் துல் நியமிக்கப்பட்டுள்ளார்.