Advertisement

சிறந்த டி20 வீரர், வளர்ந்து வரும் வீரருக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி!

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 வீரர் மற்றும் வளர்ந்து வரும் வீரருக்கான 4 பேர் அடங்கிய பரிந்துரை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan January 03, 2024 • 20:16 PM
சிறந்த டி20 வீரர், வளர்ந்து வரும் வீரருக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி!
சிறந்த டி20 வீரர், வளர்ந்து வரும் வீரருக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி! (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தை சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Trending


அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்து, இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் 2023ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் இலங்கையை சேர்ந்த தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement