
You Cannot Take Afghanistan Lightly, Says Harbhajan Singh (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை கடினமாக்கி கொண்டுள்ளது.
இனி ஆடும் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றாலும் கூட, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இது பெரும்பாலும் சாத்தியமற்றது.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தேர்வும், இந்திய அணியின் முடிவுகளும் மோசமாக இருந்ததால், அவைதான் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. இந்திய அணி தேர்வு முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.