Advertisement
Advertisement
Advertisement

இவர்களால் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடும் போலா - மரைஸ் எராஸ்மஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பணியாற்றி வரும் நடுவர் எராஸ்மஸ் இந்திய அணி வீரர்கள் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
 “You Guys Are Giving Me Heart Attack Every Over” – Umpire Marais Erasmus To Indian Players On Day 3
“You Guys Are Giving Me Heart Attack Every Over” – Umpire Marais Erasmus To Indian Players On Day 3 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 06, 2022 • 12:38 PM

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியானது தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை. மேலும் அவர்கள் கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் உள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 06, 2022 • 12:38 PM

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கையே தற்போது இந்த போட்டியில் ஓங்கியுள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் நான்காம் நாளான இன்று விரைவாக விக்கெட்டுகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாக வீழ்த்தியே ஆக வேண்டும். அப்படி விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்றால் நிச்சயம் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதியுள்ளதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

Trending

இந்நிலையில் இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக வீரர்களுக்கு இடையேயான மோதல், நடுவரின் கவனக்குறைவு என முதல் நாளில் இருந்தே ஆட்டம் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பணியாற்றி வரும் நடுவர் எராஸ்மஸ் இந்திய அணி வீரர்கள் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரை வீசும் போதும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்படி செய்கின்றனர். ஏனெனில் தொடர்ச்சியாக வெற்றிக்காக விடாப்பிடியாக போராடும் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு ஓவரின் போதும் என்னிடம் அப்பீல் செய்கின்றனர். இதன் காரணமாக முடிவு எடுப்பதில் எனக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அந்த வகையில் இந்திய வீரர்கள் தங்களது அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்களின் உத்வேகமான செயல்பாட்டால் என்னால் சற்றும் நிதானமாக இருக்க முடியவில்லை. எந்நேரமும் உன்னிப்பாகப் போட்டியை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement