'You Will See A More Confident Yuzvendra Chahal In This Series' (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியா, மனீஷ் பாண்டே, புவனேஷ்வர் குமா, பிரித்வி ஷா அடங்கிய அணி விளையாடவுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13ஆம் தேதி தொடங்கி, ஜூலை 18 ஆம் தேதி வரையும், டி20 தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி, ஜூலை 25 ஆம் தேதியுடனும் நிறைவுபெறுகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், இந்திய அணி தன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.