
சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் லசித் மலிங்கா. இவரது தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது.
மேலும் 2011ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா இன்று அறிவித்தார்.
இதையடுத்து அவருக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா தனது ட்விட்டர் பதிவில், "சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள். இலங்கை கிரிக்கெட்டுக்கும், சர்வதேச கிரிக்கெட்டும் அளித்த உங்களது பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும். உங்களுடன் விளையாடியதில் மகிழ்ச்சி. இப்போதிலிருந்து நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வாழ்த்துகள். கொடுப்பதற்கு நிறைய அறிவு இருக்கிறது. ஜாம்பவான்." என்று பதிவிட்டுள்ளார்.