
Yuzvendra Chahal becomes second-fastest bowler to scalp 150 wickets in IPL (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி கட்டத்தில் போராடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.