Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: நடுவரிடம் கடிந்து கொண்ட சஹால், சாம்சன்!

நேற்றையப் போட்டியில் சஹல், நடுவரிடம் சென்று கோபத்தில் கத்தினார். தொடர்ந்து சாம்சனும் நடுவரிடம் வந்து இது எப்படி ஒயிட்? என கேட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
Yuzvendra Chahal loses his cool and yells at the umpire during an IPL 2022 match against LSG
Yuzvendra Chahal loses his cool and yells at the umpire during an IPL 2022 match against LSG (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 11, 2022 • 12:29 PM

ஐபிஎல் 15ஆவது சீசனின் 20ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 11, 2022 • 12:29 PM

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷிம்ரோன் ஹெட்மையர் (59), படிக்கல் (29), அஸ்வின் (28) ஆகியோர் ரன்களை சேர்த்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 165/6 ரன்களை சேர்த்தது.

Trending

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர் கே.எல்.ராகுலை 0 (1) முதல் பந்திலேயே போல்ட், கிளின் போல்ட் ஆக்கினார். இதனைத் தொடர்ந்து ஒய்ட் சென்ற நிலையில், இரண்டாவது பந்திலேயே கிருஷ்ணப்பா கௌதமை 0 (1) LBW ஆக்கினார். இதனால் லக்னோ அணி 1-2 என திணறியது.

அடுத்து ஜேசன் ஹோல்டரும் 8 (14) பெரிய ஸ்கோர் அடிக்காமல் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் நடையைக் கட்டினார். தொடர்ந்து ஆயுஷ் படோனியும் 5 (7) அவுட் ஆனதால், ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் திரும்பியது. அடுத்து ஓபனர் குவின்டன் டி காக்கும் 39 (32) பெரிய ஸ்கோர் அடிக்காமல் சஹலின் சுழலில் சிக்கினார்.

அடுத்து அதிரடி வீரர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், சமீரா ஆகியோர் களத்தில் இருந்தார்கள். 18 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது சஹல் பந்துவீச வந்தார். முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் சிக்ஸர் அடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்த 3 பந்தில் சஹல் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு ஒய்டும் அடங்கும். ஒவ்வொரு ரன்னும் முக்கியமானதாக மாறியது. அப்போது 5ஆவது பந்தை சமீராவுக்கு சஹல் வீசிய நிலையில் அதனை நடுவர் ஒயிட் என அறிவித்தார்.

ஆனால் பந்து ஒயிட் கிரிஸிற்கு உள்ளேதான் சென்றது. இதனால் அதிருப்தியடைந்த சஹல், நடுவரிடம் சென்று கோபத்தில் கத்தினார். தொடர்ந்து சாம்சனும் நடுவரிடம் வந்து இது எப்படி ஒயிட்? என கேட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே சமீராவை சஹல் வீழ்த்தினார்.

இப்படி பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் பௌலர் குல்தீப் சன்தான். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது அதிரடி ஆட்டக்காரர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர் மட்டுமே சன் அடிக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement