ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஹாலா? குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக சாஹல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து ட்வீட் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது.
ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கினர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் தான் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட ராஜஸ்தான் அணியின் புதிய ஜெர்சியை கூட கேப்டன் என்ற முறையில் சஞ்சு சாம்சன் தான் பெற்று கொண்டார். இதனால் ஒருநாள் இரவில் எப்படி கேப்டன் மாற்றப்படுவார். அதுவும் சாஹல் ஏன் கேப்டன் என்று ரசிகர்களும் குழம்பி போய் உள்ளனர்.
Trending
இது ஏதாவது பொய்யாக இருக்கலாம் என நினைத்த நிலையில், சஞ்சு சாம்சனும், சாஹலுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், பட்லர், சிம்ரன் ஹேட்மர், ஜெய்ஷ்வால், டேரல் மிட்செல், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, சாஹல், டிரெண்ட் பவுல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இப்படி பலமான அணியை தேர்வு செய்துவிட்டு கேப்டனில் கோட்டைவிட்டதே என ரசிகர்கள் நினைத்த நிலையில், சாஹல் ராஜஸ்தான் அணி அட்மினிடமிருந்து கடவு சொல்லை வாங்கி , தன்னை தானே கேப்டனாக அறிவித்து கொண்டதாக பிறகு தெரிவிக்கப்பட்டது. ஆனால்,இதுவும் அணியை பிரபலப்படுத்த செய்யப்படும் விளம்பரத்தின் ஒரு பகுதி ஆகும்.
ஒரு சிலர், இந்த விளம்பர யுத்தியை ரசித்தாலும், பலரும் விளம்பரத்திற்கு யோசிக்கும் யுத்தியை போட்டிக்காக யோசித்து செயல்படுங்கள் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் ராயல்ஸ் அணி நினைத்தது போலலே தற்போது சாஹல் பெயரும், ஆர்.ஆர். அணியின் பெயரும் டிரெண்டிங்கில் உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now