
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான அணியை தேர்வு செய்து வருகின்றன.
மேலும் 2007 ஆம் ஆண்டு முதலாவது டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணி ஆனது அதன் பிறகு ஒரு முறை கூட டி20 கோப்பையை கைப்பற்றவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை உலகக்கோப்பையை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் நிலையில் இம்முறை உலகக் கோப்பையை கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்ற பெருமையை பெற இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த தொடருக்கான அணியில் தேர்வு எவ்வாறு அமையப் போகிறது என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.