ZIM vs AFG, 2nd ODI: ஆஃப்கானிஸ்தானுக்கு 229 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
Trending
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் சகாப்வா ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இன்னசெண்ட் கையா - கேப்டன் எர்வின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் எர்வின் 32 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையிலிருந்த கையா அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் களமிறங்கிய மதவெரே 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த கையாவும் 63 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 40 ரன்களிலும், மில்டன் ஷும்பா ஒரு ரன்னிலும், டிரிபனோ, சடாரோ ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர்.
ஆனாலும் இறுதியில் அதிரடியாக விளையாடிய ரியான் பார்ல் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியாப் பார்ல் 50 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அஹ்மத் மாலிக் 3 விக்கெட்டுகளையும், ஃபரூக்கி, முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 229 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now