
ZIM vs AFG, 2nd ODI: Ibrahim Zadran's century helps Afghanistan beat Zimbabwe by 8 wickets runs (Image Source: Google)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் சகாப்வா ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இன்னசெண்ட் கையா - கேப்டன் எர்வின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.