
ZIM vs BAN, 2nd ODI: Zimbabwe end with 240 (Image Source: Google)
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் டினாஷே கமுன்ஹுகாம்வே, மருமணி, சகாப்வா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பிராண்டன் டெய்லர் - டியான் மேயர்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தியது. அதன்பின் மியர்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் டெய்லரும் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.