
ZIM vs BAN, 3rd T20I: Ryan Burl's Fifty helps Zimbabwe post a total on 156/8 (Image Source: Google)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இதில் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 31ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி இம்முறையும் பேட்டிங் செய்வதாகவே அறிவித்தது.