Advertisement

ZIM vs BAN, Day 4 : விடா முயற்சியுடன் போராடும் ஜிம்பாப்வே; போட்டியில் வெல்வது யார்? 

ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 10, 2021 • 22:12 PM
ZIM vs BAN, Day 4 : Bangladesh strike back after Taylor 92
ZIM vs BAN, Day 4 : Bangladesh strike back after Taylor 92 (Image Source: Google)
Advertisement

வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி மஹ்மதுல்லா, டஸ்கின் அஹ்மது ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 468 ரன்களைச் சேர்த்தது. 

Trending


அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்ப்பாவே அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானாலும், ஃபாலோ ஆனைத்தவிர்த்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 284 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. 

அந்த அணியில் சாதம் இஸ்லாம் 115 ரன்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 117 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 477 ரன்கள் என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி நிர்ணயித்தது. 

பின்னர் இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணியில் பிராண்டன் டெய்லர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மேலும் 33 பந்துகளிலேயே அரைசதமும் கடந்தார். அதன்பின் 92 ரன்களை எட்டிய டெய்லர் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் டியன் மேயர்ஸ் 18 ரன்களுடனும், டிரிபனோ 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி நாளை போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement