
ZIM vs BAN : Myers and Burl help Zimbabwe to post a strong 193/5 (Image Source: Google)
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மருமணி - மாதேவெர் இணை நிலையான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் 28 ரன்களில் மருமணி ஆட்டமிழக்க, மாதேவெருடன் ஜோடி சேர்ந்த சகாப்வா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் மாதேவெர் அரைசதம் கடக்க, சகாப்வா 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னர் மாதேவெரும் 54 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றினார்.