
ZIM vs IND, 2nd ODI: India beat Zimbabwe by 5 wickets and clinch the series by 2-0 (Image Source: Google)
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. தீபக் சாஹர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 31 ரன்களுக்கே ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், சீன் வில்லியம்ஸும் ரியான் பர்லும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.