
இந்திய அணியில் சேவாக், சச்சின் ஓய்வுக்கு பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான், தனது இடத்தை அணியில் உறுதி செய்தார். ஐசிசி தொடர்களில் பட்டையை கிளப்பும் தவான், இந்திய அணியின் பல்வேறு வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்பினார். டெஸ்ட் போட்டியில் தவான் இடம்பெறுவது இல்லை என்பதால், சீனியர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கும் போது எல்லாம் ஷிகர் தவானை தான் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்து பிசிசிஐ ஜூனியர்களை வழிநடத்தும் பொறுப்பை வழங்கியது.
ஐபிஎல் தொடர்கள் மூலம் இழந்த ஃபார்மை மீட்ட ஷிகர் தவான், ரோஹித் சர்மாவின் ஆதரவோடு மீண்டும் இந்தியாவின் நம்பர் அணியிலும் இடம் பிடித்தார். இடம் பிடித்தது மட்டுமல்லாது, பழைய அதிரடி ஆட்டத்தையும் தவான் வெளிப்படுத்தி, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரையும் தவான் தலைமையிலான அணி, வெற்றி பெற்றது.