
ZIM vs PAK 3rd T20I Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரை அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஒயிட்வாஷை தவிர்ப்பதுடன், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிம்பாப்வே அணியும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ZIM vs PAK 3rd T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்
- இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், புலவாயோ
- நேரம்: மாலை 5 மணி (இந்திய நேரப்படி)
ZIM vs PAK 3rd T20I Live Streaming Details
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
ZIM vs PAK: Head-to-Head In T20is
- மோதிய போட்டிகள்: 20
- ஜிம்பாப்வே: 02
- பாகிஸ்தான்: 18
- முடிவில்லை: 00