ZIM vs BAN, 3rd ODI: போட்டி முன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகளை கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி வென்று சாதனைப் படைத்தது.
இதையடுத்து நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அபார வெற்றியைப் பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs வங்கதேசம்
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- நேரம் - மதியம் 12.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரேஜிஸ் சகாப்வா தலைமையிலான ஜிம்பாப்வே அணி வங்கதேசத்திற்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபாரமாக வெற்றிபெற்று தொடரை வென்று அசத்தியுள்ளது.
அதிலும் சிக்கந்தர் ரஸா அடுத்தடுத்து சதங்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். அவருடன் சகாப்வா, இன்னசெண்ட் கையா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.
மேலும் நாளைய போட்டியிலும் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றால் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம் சமீப காலமாக ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி வெற்றிபெற்றாலும், தற்போது ஜிம்பாப்வே டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ளது அந்த அணிக்கும் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹிம் ஆகியோரும் தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் பெரும் இக்கட்டான நிலையாக உள்ளது. இதனால் இப்போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு, ஒயிட்வாஷை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 80
- ஜிம்பாப்வே வெற்றி - 30
- வங்கதேசம் வெற்றி - 50
உத்தேச லெவன்
ஜிம்பாப்வே - தகுத்ஸ்வானாஷே கைடானோ, தடிவானாஷே மருமணி, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவேரே, சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (கே), டோனி முனியோங்கா, லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நயாச்சி, தனகா சிவாங்கா.
வங்கதேசம் - தமிம் இக்பால் (கே), அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரெஜிஸ் சகப்வா, முஷ்பிகுர் ரஹீம்
- பேட்டர்ஸ் - இன்னசென்ட் கயா, அனாமுல் ஹக், தமீம் இக்பால்
- ஆல்-ரவுண்டர்கள் - சிக்கந்தர் ராசா, மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ்
- பந்துவீச்சாளர்கள் - ஹசன் மஹ்மூத், விக்டர் நியுச்சி, ஷோரிஃபுல் இஸ்லாம்
Win Big, Make Your Cricket Tales Now