
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லிடாம் டௌசன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் சாய் சுதர்ஷன், அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஷர்துல் தக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.