
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங்(கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அதிர், ஆண்டி மெக்பிரைன், தியோ வான் வொர்காம், கிரஹாம் ஹியூம், கிரேக் யங்
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், அல்லா கசன்பர், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.