AFG vs SA, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி…
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி 11 ரன்களுக்கும், ரீஸா ஹென்ரிக்ஸ் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.