
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. இதையடுத்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. மறுபக்கம் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பிலும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
அதன்படி இப்போட்டியில் ஷெர்பேன் ரூதர்ஃபோர்டுக்கு பதிலாக ஆண்ட்ரே ரஸ்ஸல் லெவனில் சேர்க்கப்படலாம். ஏனெனில் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையடிய ரூதர்ஃபோர்ட் பெரிதளவில் சோபிக்க தவறியுள்ளர். மறுபக்கம் முதல் போட்டியில் விளையாடிய ஆண்ட்ரே ரஸல் பேட்டிங்கில் 15 ரன்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய நிலையில், இப்போட்டியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் உத்தேச லெவன்: எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்/ஆண்ட்ரே ரஸல், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப்.